என்றும் நீ
என் நெஞ்சக் குழியில் நீ
பார்க்கும் விழியில் நீ
பேசும் மொழியில் நீ
கனவில் நீ
நினைவில் நீ
என்றென்றும் நீ
எண்ணமெல்லாம் நீ
என்னுடன் நீ
உன்னுடன் நான்
என்றிருந்தோம் நாம் - இன்று
எங்கோ நான்
எங்கோ நீ
ஏன் இணைந்தோம்
ஏன் பிரிந்தோம்
விடை யாருக்கும் தெரியவில்லை
என் மனம் எனும்
சுவாசப் பையில் மாறமல்
மணம் விசும் மலர் செண்டே
நான் மரிக்கும் வரை
இந்த மலரின் இதழ்கள்
ஈரமாகவே இருக்கும்
காரணம் அது இருப்பது
என் இதயத்தில்
நான் எங்கிருந்த போதிலும்
உன் நினைவு மலர்களால்
என் இதயம்
மணத்துக் கொண்டே இருக்கும்
அது உன் நினைவுகள்
மாத்திரம் வைக்கும்
மணி மண்டபம்

6 comments:
நல்ல கவிதை
வாழ்த்துக்கள்
thanks for opinion mr. velu
நல்லா இருக்குப்பா
வாழ்த்துக்கள்.
WORD VERIFICATION யை எடுத்துவிடவும்.
Ranjana's Garden,
In the name of prevention of cruelty to men and women,I appeal to you.Please stopwriting poetry;better still stop writing altogether.
thanks mr, rajavamsam for ur appreciation
any hurting in my poem, or any reason, mr. periyar any way thanks for ur comment.
Post a Comment